பேருந்தினுள்
புகைபிடிக்கக்கூடாதென்று...
அப்போதுதான் சுருட்டு ஒன்றை
சுகமாய் இழுத்த
பெரியவரை இறக்கிவிட்டு
பெருமிதமாய் புறப்பட்டது...
எதிரே...
தீவட்டிகளுடன் ஓர் கூட்டம்...
கட்சித் தலைவன் கைதாம்...
சற்று நேரத்தில்
வழியில் இறக்கி விட்ட
கிழவன் தட்டிய
சுருட்டுச்சாம்பலாய் பேருந்து...
No comments:
Post a Comment