இசை
இமயத்தை குனிந்து பார்க்கும்
உயரத்தில் இசை
இறைவனுக்கு மிக மிக
பக்கத்தில் இசை

முறுக்கேறிய மூங்கிலையும்
மென்மையாக்கும் குழலோசை
ஆச்சா மரங்களையும்
ஆலாபனை செய்ய வைக்கும்
நாத இசை

இது
தேவர்கள் பேசும் மொழி
தெய்வங்களுக்கும்
தெரிந்த மொழி
பாமரனும் ரசிக்கும் மொழி
பாடல்களில் வசிக்கும் மொழி 

விடியலுக்கு பூபாலம்...
தளர்வாகவும் போது தாலாட்டு
மகிழ்வாய் என்றென்றும் கல்யாணி
முடியும் நேரம்  முராரி...

செவிகளுக்கு மட்டும்
கேட்பது சத்தம்
செவியையும் தாண்டி
சேர்வதே சந்தம்

உயிருக்கும் உணர்வுக்கும்
உருவான பந்தம்
இசை
இன்றைக்கும் என்றைக்கும்
இறைவனுக்கே சொந்தம்

தோலையும் மரத்தையும் வாத்தியமாக்கி
சந்தங்களை அதற்கும் சாத்தியமாக்கும்
இசைக்கு இன்று பிறந்தநாள்...
இன்னிசை கீதங்கள் பல
இசைக்க பிறந்தநாள்

No comments:

Post a Comment