அதிகாலை தூக்கத்தை
அனுபவிக்க வேண்டுமா?
நான்கு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்து
எழுந்த இடத்திலிருந்து
மீண்டும் துவங்கு
உன் தூக்கத்தை...
அப்போதுதான்
இடுப்பிலும்
கழுத்திலும்
கைவிரல் இடையிலும்
விடுபடும் சோம்பலை
விழிப்பில் காண்பாய்...
முதுகுத்தண்டு
மொத்தமாய் தரை அழுத்த...
கால்களை நீட்டி
கைகளை தளர்த்தி
பாதி கண் திறந்து
விழிப்பில் உணர்வாய்
மயக்கத்தை...
வலப்பக்கம்
இடப்பக்கம் என
மாறி மாறி படுத்து...
குளிருக்கு ஒடுங்கும் கோழியாய்
உடல் சுருக்கி...
போர்வைக்குள்
மொத்தமாய் புகுந்து கொண்டு...
விலகிப்போன தலையணையை
கழுத்துக்குள் சிறைப்பிடித்து...
கண்களுக்கு வெளியே
காத்திருக்கும் உறக்கத்தை
இமைகளின் வழியே
மூளைக்கு அனுப்பி
மூளையின் விளக்கணைத்து
எண்ணத்தின் கதவடைத்து
மீண்டும் நித்திரையின்
வாசலுக்கு வருவதுதான்
எத்தனை பரவசம்...
சற்று நேரத்தில்
துவங்கிவிடும் சத்தங்கள்...
உன் நித்திரைக்கு சவாலாய்
விதம்விதமாய் தொல்லைகள்...
கட்டுக்கட்டாய் கடமைகள்...
நீ எழுந்து விட்டால் போதும்...
தூங்குவது போல்
நடித்துக் கொண்டிருக்கும்
தொல்லைகள் எல்லாம்
தொடர்ந்து வந்து
தொற்றிக் கொள்ளும்...
உன்னால்
உனக்காக
தனிமையில்
அனுபவிக்க கிடைத்தது
அதிகாலை தூக்கம் மட்டும்தான்...
அதிகாலை தூக்கத்தை
அனுபவிக்க வேண்டுமா...?
கலைத்துவிடு உன்
இரவு தூக்கத்தை...!
அனுபவிக்க வேண்டுமா?
நான்கு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்து
எழுந்த இடத்திலிருந்து
மீண்டும் துவங்கு
உன் தூக்கத்தை...
அப்போதுதான்
இடுப்பிலும்
கழுத்திலும்
கைவிரல் இடையிலும்
விடுபடும் சோம்பலை
விழிப்பில் காண்பாய்...
முதுகுத்தண்டு
மொத்தமாய் தரை அழுத்த...
கால்களை நீட்டி
கைகளை தளர்த்தி
பாதி கண் திறந்து
விழிப்பில் உணர்வாய்
மயக்கத்தை...
வலப்பக்கம்
இடப்பக்கம் என
மாறி மாறி படுத்து...
குளிருக்கு ஒடுங்கும் கோழியாய்
உடல் சுருக்கி...
போர்வைக்குள்
மொத்தமாய் புகுந்து கொண்டு...
விலகிப்போன தலையணையை
கழுத்துக்குள் சிறைப்பிடித்து...
கண்களுக்கு வெளியே
காத்திருக்கும் உறக்கத்தை
இமைகளின் வழியே
மூளைக்கு அனுப்பி
மூளையின் விளக்கணைத்து
எண்ணத்தின் கதவடைத்து
மீண்டும் நித்திரையின்
வாசலுக்கு வருவதுதான்
எத்தனை பரவசம்...
சற்று நேரத்தில்
துவங்கிவிடும் சத்தங்கள்...
உன் நித்திரைக்கு சவாலாய்
விதம்விதமாய் தொல்லைகள்...
கட்டுக்கட்டாய் கடமைகள்...
நீ எழுந்து விட்டால் போதும்...
தூங்குவது போல்
நடித்துக் கொண்டிருக்கும்
தொல்லைகள் எல்லாம்
தொடர்ந்து வந்து
தொற்றிக் கொள்ளும்...
உன்னால்
உனக்காக
தனிமையில்
அனுபவிக்க கிடைத்தது
அதிகாலை தூக்கம் மட்டும்தான்...
அதிகாலை தூக்கத்தை
அனுபவிக்க வேண்டுமா...?
கலைத்துவிடு உன்
இரவு தூக்கத்தை...!
No comments:
Post a Comment