ஜன்னலுக்கு உள்ளே,
தொலைக்காட்சி 'தொடர் மழையில்'
மனிதர்கள் நனைந்து கொண்டிருக்க...
ஜன்னலுக்கு வெளியே
யாராலும் கவனிக்கப்படாமல்
பெய்துகொண்டிருக்கிறது தொடர்மழை...
மின்னல் வெட்டாய்
வெளிச்சத்தை அனுப்பி
கவனத்தை ஈர்க்கிறது மழை...
அப்படியும் யாரும்
கவனிக்காமல் போகவே...!
கோபம் கொண்ட மழை,
இடியாய் இறங்கி
தொலைக்காட்சி பெட்டியை
துளைத்துச் சென்றது...
எல்லோரும் இப்போது
வாசலுக்கு வந்தார்கள்,
மழையை ரசிப்பதற்காக அல்ல...
தொடரை அடுத்த
தூவானத்தை...
திட்டித்தீர்பதற்காக...!
தொலைக்காட்சி 'தொடர் மழையில்'
மனிதர்கள் நனைந்து கொண்டிருக்க...
ஜன்னலுக்கு வெளியே
யாராலும் கவனிக்கப்படாமல்
பெய்துகொண்டிருக்கிறது தொடர்மழை...
மின்னல் வெட்டாய்
வெளிச்சத்தை அனுப்பி
கவனத்தை ஈர்க்கிறது மழை...
அப்படியும் யாரும்
கவனிக்காமல் போகவே...!
கோபம் கொண்ட மழை,
இடியாய் இறங்கி
தொலைக்காட்சி பெட்டியை
துளைத்துச் சென்றது...
எல்லோரும் இப்போது
வாசலுக்கு வந்தார்கள்,
மழையை ரசிப்பதற்காக அல்ல...
தொடரை அடுத்த
தூவானத்தை...
திட்டித்தீர்பதற்காக...!
No comments:
Post a Comment